பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

 பற்றி கருதுங்கால் எத்தனை நாளைக்கு ஒருதரம் இதை வைத்துக் கொள்வது என்பது முக்கியமான பிரச்னையாகும். நான் விசாரித்து

அறிந்ததில் நல்ல திடகாத்திரம் உடைய ஒருவன் ஒரு வாரத்திற்கு ஒரு முறை வைத்துக் கொள்வதே தேக ஆரோக்யத்திற்கும், நீண்ட ஆயுளை பெறுவதற்கும் நலமாம் என்பதாம். இந்த வழக்கத்தை ஒரு வன் தனது 50-ம் வயது வரையில் வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக இவ்வழக்கத்தை குறைத்துக் கொள்ளு தல் அவசியமாகும். ஒருவனது 60-ம் ஆண்டில் சஷ்டிப் பூர்த்தி என்னும் சடங்கை நடத்தும்போது நம்மவர்களுக்குள் ஒரு அவசிய மான கிரியை உண்டு. அதாவது கரும்பாலான ஒரு வில்லை கையில் ஏந்தி ஐந்து புஷ்ப பானங்களை கல்யாண பந்தலில் ஆவாகனம் செய்திருக்கும் பரமசிவத்தின்மீது எய்வதாகும். இதற்கு அர்த்தம் என்னவென்றால் எப்படி கடவுள் கண்ணால் மன்மதன் எரிந்தானோ அதுபோல உன் மன்மத வியாபாரத்தை ஒழித்துவிடவேண்டும் என்ப தாம். மூன்றாவதாக வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தை ஒருவன் மேற் கொள்ளவேண்டும். இதில் ஒரு முக்கிய நீதி ஒருவன் மனைவியுடன் வாழ்ந்தாலும் சம்போகத்தை தவிர்க்கவேண்டும் என்பதாம். கடைசி யாக சன்யாச ஆஸ்ரமம். இதில் சம்போகத்திற்கு இடமேயில்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இதைப்பற்றி எனது வாலிய நண்பர் அறியவேண்டிய விஷயங்கள் பலஉள (1) முதலாவது பகலில் சம்போகமே கூடாது. இதை கவனியாது பகலில் இதை வைத்துக் கொண்டால் கூடிய சீக்கிரத்தில் க்ஷயரோகம் முதலிய கடுமையான நோய்களுக்கு ஆளாவார்கள். (2) இரவில் சம்போகம் செய்வதில் போஜனம் கொண்டவுடன் கூடாது, (3) சில தினங்களில் இதை தவிர்க்கவேண்டும். உதாரணமாக எண்ணெய் தேய்த்துக் குளித்த தினம், சர்வாங்க சவரம் செய்துக்கொண்ட தினம், மனைவி ரஜஸ்வலை யோடு இருக்கும் மூன்று தினங்களில் கூடாது (4) மனதில் துக்கத் தோடு இருக்கும்போதாவது இதைவைத்துக் கொள்ளக் கூடாது. பயந்திருக்கும் போதாவது பசியுடன் இருக்கும்போதாவது கூடாது. (6) சம்போகம் செய்தவுடன் சுத்த ஜலத்தால் அங்கத்தை நன்றாய் கழுவிக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் சில வியாதிகள் நெருக்கமாட்டா மேற்சொன்ன விஷயங்களெல்லாம் பருவம் வந்த தங்கள் ஆண் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் அவர்க ளுடைய தாய் தந்தையர் கட்டாயமாய் தெரிவிக்க வேண்டியது அவசி