பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3

 லும் அவைகளை யெல்லாம் கழுவிவிட்டே சாப்பிட வேண்டுமென்பது நம்மவர்களுடைய கொள்கை. இப்படியே வாயை அலம்புவதினால் வாய் சுத்தமாகிறது. இந்த நல்ல வழக்கத்தை மேனாட்டு நாகரிகம் அடைந்த பெரும்பாலார் விட்டிருக்கின்றனர். இது பெரும் தவறாகும். தற்காலத்திலும் தென்னாட்டில் யாராவது விருந்தாளிகள் போனால் அவர்களுக்கு கை கால்களை சுத்தம் செய்துகொண்டு. வாயை கழுவ ஜலம் கொடுத்து அவர்கள் அப்படி செய்து கொண்டபிறகே அவர்களை விருந்து உண்ணும் அறைக்கு அழைத்து செல்கிறார்கள். . ."

(1) முதலாக இது நாம் எந்த உணவையும் உண்பதற்கு 1 மணி நேரம் முன்பாக ஒரு லோட்டா சுத்த ஜலத்தை குடிப்பதாகும். இதை 60 வருடங்களுக்கு மேல் அப்யசித்து வருகிறேன். இதன் விவரத்தையும் இதை நான் ஆரம்பித்த காரணத்தையும் எழுதுகின் றேன். எனக்கு சுமார் 20 வயதாயிருக்கும்போது என் தமையனார் அய்யாசாமி முதலியாருடன், மைலாப்பூரில் அக்காலத்தில் பிரபல வைத்தியரா யிருந்த டாக்டர்.நஞ்சுண்ட ராவ் வீட்டிற்கு போனேன். அப்பொழுது என் தமையனார் தனக்கு வயிற்று நோய் அதிகமாயிருப்ப தாயும் அது தன்னை அடிக்கடி பாதிப்பதாயும் கூறி அதற்கு மருந்து கேட்டார். அப்பொழுது நஞ்சுண்ட ராவ் கூறிய பதிலை ஞாபகமிருக் கும் வரையில் அவருடைய வார்த்தைகளாலேயே எழுதுகிறேன். "அய்யாசாமி நீடித்திருக்கும் இந்த வயிற்று நோய்க்கு அப்போதைக் கப்போது மருந்து கொடுப்பதில் பயனில்லை. பிஸ்மத் முதலிய மருந்துகளை கொடுத்தால் அத்தருணம் நோய் குணமாகும். ஆயினும் இந்த வயிற்று நோய் மருந்தை நிறுத்தினால் மறுபடியும் வந்து சேரும். நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேள். தினம் நீ சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு டம்ளர் வெந்நீரை குடித்துவிடு , பிறகு ஒரு மணி நேரத்திற்கு அப்புறம் உன் உணவை கொள் என் அனுபவத்தில் இவ்வழக்கத்தின் குணம் என்னவென்றால் அச்சமயம் வயிற்றில் செரித்தும் செரிக்காமலும் இருக்கிற உணவை வயிற்றி லிருந்து-குடலுக்கு போகச் செய்வது என்பதாம். ஒரு மணிக்கு முன்பாக இதை ஏன் செய்ய வேண்டும் என்றால் அப்படி செய்தால் தான் வயிற்றுப் பை காலியாகி ஓய்வைப் பெறும்" என்றார். இதைக் கேட்டவுடன், எங்கள் குடும்பத்தில் குன்ம நோய் சாதாரணமாய் உண்டு என்பதை அறிந்த நான் மேற்சொன்ன வழக்கத்தை கைப்பற்றி நடக்கலானேன். அது முதல் இத்தனை வருட காலமாக மற்ற