பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

4. நோய்கள் என்ன எப்பொழுதாவது வந்து பாதித்தபோதிலும் வயிற்று நோய் மாத்திரம் என்னை பீடிக்கவில்லை என்றே கூறவேண்டும். நஞ்சுண்டராவ் சொன்ன இவ்வழக்கத்தை கடைப்பிடித்து நடக்காத என் தமையனர் எப்பொழுதும் வயிற்று நோய்க்கு ஏதாவது மருந்து களை சாப்பிட்டுக்கொண்டு வந்தார் ; மருந்தேயாயினும் விருந்தோடு உண்' என்பது ஒரு பழமொழி, என் தமையனார் இதை மாற்றி விருந் தேயாயினும் மருந்தோடு உண்' என்று பழகி வந்தார், இதன் பயனாக கடைசியில் அவ்வயிற்று நோயால் உண்டான ஜீரணப் பையில் புற்று நோயால் தனது 47-வது வயதிலேயே என்னையும் உலகையும் விட்டு பிரிந்தார்.

(2) இரண்டாவதாக சிறு வயது முதல் நான் அனுஷ்டித்து வந்த போஜனத்தைப் பற்றிய மற்றொரு விதி என்னவென்றால் ஒரு உண விற்கும் மற்றொரு உணவிற்கும் இடையில் நாலு மணி சாவகாசம் இருக்க வேண்டும் என்பதுதான், இப்படி செய்வது நல்லதென்று எல்லா வைத்தியர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். " சொல்லுதல் யாவர்க்கும் எளிதாம், சொல்லிய வண்ணம் செய்தல் அரிதாம் ' என்னு மிப்பழமொழி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. இவ் விதியை நமக்கெல்லாம் போதித்தபோதிலும் இதை முக்கியமாக மீறி நடப்ப வர்கள் வெகுவாய் வைத்தியர்களே ஆவார்கள். நாங்கள் இந்த விதிப்படி நடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று அவர்களில் பலர் என்னிடம் கூறியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வைத்தி யர்களுடைய காலம் அவர்கள் கையில் இல்லை. எந்த சமயம் யார் வந்து நோயாளியைப் பார்க்க வேண்டுமென்று அவசரமாய் கேட்ட போதிலும் நோயாளியின் வீட்டிற்குப் போய் அவர்களை கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். ஆகவே மணி கணக்கு பிரகாரம் போஜனத்தைக் கொள்வது அவர்களுக்கு கஷ்டங்தான். ஒரு உணவிற்கும் மறு உணவுக்கும் நாலுமணி சாவகாசம் இருக்க வேண்டியதின் காரணம் என்னவென்றால் சாதாரணமாக நாம் உண் ணும் உணவு 3 அல்லது 3 1/2 மணி பிடிக்கிறது ஜீரணமாக என்பதே யாம். ஆகவே ஒரு முறை உண்ட உணவு ஜீரணமானபின் மறு முறை உண்ண வேண்டும் என்பது சுகாதார விதியாம் ; இதற்கிடை யில் ஏதாவது உண்டால், முதலில் உண்ட உணவு பாதி ஜீரணமான வுடன் புதிய உணவு அதனுடன் போய் கலப்பதால் ஜீரண சக்தியை