பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

? ர்ந்து சாப்பிடும்போது இந்த என் வழக்கம் மற்றவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் கொடுக்கிறது என்பதற்கு சந்தேகமில்லை.! அதற்காக நான் சாப்பிட உட்காரும்போதே நான் மெல்ல சாப்பிடு வேன். கொஞ்சம் நாழிகை ஆகும், நீங்கள் புசித்தவுடன் எழுந்திருந்து போய் கை கழுவிக்கொள்ளலாம், இதை எனக்கு அவமரியாதை செய் வதாக எண்ணமாட்டேன்" என்று கூறி விடுவேன். நான் வக்கீலாக 25 வருடங்கள் வேலை பார்த்து வந்தேன் என் பது எனது நண்பர்கள் அறிந்த விஷயமே. அக்காலத்தில் காலை போஜனம் அருந்தும்போது மேற் குறித்த கஷ்டத்தை முதலில் நானும் அனுபவித்தேன். பிறகு இதை தவிர்ப்பதற்காக ஓர் யுக்தி செய்தேன். மெத்தையில் என் வீட்டில் இருந்த கடிகாரத்தை எப் பொழுதும் அரை மணி நேரம் வேகமாய் போகும்படி திருப்பி வைத் தேன். கட்சிக்காரர்கள் என்னை தொந்தரவு செய்யும்போதெல்லாம் * ஐஐயோ மணி 10 அடித்துவிட்டது. நான் சீக்கிரம் கீழே போய் குளித்துவிட்டு பூஜை செய்து சாப்பிட்டுவிட்டு கோர்ட்டுக்கு போக வேண்டும். அதற்கு நேரமாய் விட்டது. நீங்கள் எல்லாம் நாளை காலை வந்து என்ன பாருங்கள் ” என்று சொல்லி விடுவேன். அவர் கள் போனவுடன் சாவகாசமாய் என் போஜனத்தை முடித்துக் கொண்டு கோர்ட்டுக்கு போவது என் வழக்கமாகிவிட்டது. நன்ம றாய் மென்று தின்ன வேண்டும் என்று சொன்னதெல்லாம் சாதாரண அரிசி உணவை உண்ணும்போதல்ல, கடித்து திண்ணவேண்டி பதார்த்தங்களை உண்ணும்போதுதான் என்பதை கவனிக்கவும்.

பற்களைப் பாதுகாத்தல்:- நாம் உண்ணும் ஈணவு முதல் முதலாக நமது வாயிலேயே ஆரம்பமாகிறபடியால் நமது பற்களை பாதுகாக்க வேண்டியது மிக்க அவசியமாம்.வாயில் உணவைப் போட்டுக்கொண்டபின் நமது பற்களும் நாக்கும் அரைத்து குழம்பாக்குகின்றன. ஆனபடியால் பல்லிற்கு நோவு வந்தவுடன் அதை அப்போதப்போது பிடிங்கி விடாமல் குணப்படுத்தி வைத்திருப்பதே நல்லது .பற்களை பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு நல்ல உபாயம் காலையில் எழுந்தவுடன் அவைகளை துலக்குவதாம்.இது நம்மவர்களுக்குள் சாதாரண வழக்கம்.ஐரோப்பா அமெரிக்க தேசங்களில் சிலர் இரவு படுக்கும் முன் தேய்த்து விட்டே படுத்து உறங்குகின்றனர்.இப்படி செய்தல்