உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றித்
தீது இல் ஒரு கருமம் செய்பவே;—ஓது கலை
எண் இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய்!—நோக்குமால்
கண் இரண்டும் ஒன்றையே காண்.6

'கடலே அனையம் யாம், கல்வியால்!' என்னும்
அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே;—
முனிக்கு அரசு கையால் முகந்து, முழங்கும்
பனிக் கடலும், உண்ணப்படும்.7

உள்ளம் கவர்ந்து எழுத்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க!—வெள்ளம்
தடுத்தல் அரிதோ? தங் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ? விளம்பு!8

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்,
வலியோர்தமைத் தாம் மருவில்;—பலி ஏல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே,
படர் சிறைய புள்ளரசைப் பார்த்து.9

தம் குறை தீர்வு உள்ளார், தளர்ந்து, பிறர்க்கு உறூஉம்
வெங் குறை தீர்ச்சிற்பார், விழுமியோர்;—திங்கள்
கறை இருளை நீக்கக் கருதாது, உலகில்
நிறை இருளை நீக்கும், மேல் நின்று.10

பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய், புல்லியர்பால் அன்றியே,
மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம்:—துப்பின்
சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவலி? போய்ச்
சுழற்றும், சிறு புன் துரும்பு.11

வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல்தானே புதுமை!—திருந்திழாய்!—
சீத நீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ, நிற்றல் வியப்பு?12

பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர், மேலோர்;—சுரக்கும்
மலை அளவு நின்ற முலை மாதே!—பதியின்
கலை அளவு நின்ற, கதிர்.13