உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதல்முன்,
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே!—வெள்ளம்
வருவதற்கு முன்னர், அணை கோலி வையார்,
பெருருதற்கண் என் செய்வார்? பேசு!30

பேர் அறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே,
வீரமொடு காக்க விரைகுவார்;—நேரிழாய்!—
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன்மேல்
கை சென்று தாக்கும் கடிது.31

பன்னும் பனுவல் பயன் தேர் அறிவு இலார்
என்னும் அறங்கள் வலி இலவே:—நன்னுதால்!—
காய் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ,
தாழ் ஒன்று இலதாயின்தான்?32

எள்ளாது இருப்ப, இழிஞர் போற்றற்கு உரியர்;
விள்ளா அறிஞர் அது வேண்டாரே:—தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம்: அன்றிக்
கரை காப்பு உளதோ, கடல்?33

அறிவுடையார் அன்றி, அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார். சிறிதும்;—பிறை நுதால்!—
வண்ணம் செய் வாள் விழியே அன்றி, மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ, இருளைக் கண்டு?34

கற்ற அறிவினரைக் காமுறுவர், மேன்மக்கள்;
மற்றையர்தாம் என்றும் மதியாரே:—வெற்றி நெடு
வேல் வேண்டும் வாள் விழியாய்?—வேண்டா, புளிங்காடி;
பால் வேண்டும், வாழைப் பழம்.35

தக்கார்க்கே ஈவார். தகார்க்கு அளிப்பார் இல், என்று,
மிக்கார்க்கு உதவார், விழுமியோர்;—எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றி, காட்டு முளி
புல்லுக்கு இறைப்பரோ, போய்?36

பெரியார் முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும்; தெரியாய் கொல்—
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய்!—விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று, தாழ்ந்து!37