பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 87

காந்த இனக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகன இனச் Kaanthanaik Kandhak kadambanaik kaarmayil vaagananai சாந்து அணப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லேயே.

Saandhunnaippõdhum marra vaadhavarkku oru thaazhvillaiya

அவன் சேந்தன்; அவன்தான் கந்தன்; அவன் திருச் செங்கோடு என்ற மலேயில் வாழ்பவன்; சிவந்த ஒளி பொருந்திய வேலை ஏந்திய வேந்தன்; செந்தமிழ் நூல்களே விரிவு படுத்தியவன்; சிறந்த வள்ளியம்மையார்க்குக் கணவன்; கந்தக் கடம்பன்; மயிலே வாகனமாக உடையவன்; (இத்தகைய முருகனை) சாகின்ற காலத்திலேயாவது மறக்காமல் இருந்தால் அவர் களுக்கு எந்தத் தீங்கும் இல்லே.

He is Sandhan; He is Skanthan;

He resides at the Hill Thirucchengödu;

He is the royal One having an effulgent javelin;

He expounded (the ecclesiastical) works in (classical and Literary) Tamil;

He is the husband of Valli, the great;

He is Skantha (wearing the garland of) Kodamba flower;

He is the rider of the Peacock;

—Him if one should (never forgetting) think of, at least at the time of death, to them, nothing untoward will happen.

(47)

ஆசை என்பது ஒரு குரங்கு. அதன் குறும்புக்கு அளவு கிடை யாது; ஒருவேளை உணவு இருப்பின் இரண்டு வேளைகளுக்கு வேண்டும் என்று தோன்றும்; இருவேளைக்குக் கிடைப்பின் காலே மாலே சிற்றுண்டிகளைக் கேட்கும்; வாய் உணவு திருப்தி அடைந்ததாக வைத்துக்கொள்வோம்; கண்களுக்குக் காட்சி உணர்வு வளரும்: அதுவும் நிறைவுறுவதாக வைத்துக்கொள்வோம்; காதுக்கு இனிய இசையில் விருப்பம் செல்லும்; இப்படித் தேவைகள்தாம் அதிகம் ஆகுமே ஒழிய ஆசைக்கு அளவுகிடையாது. அதனல்தான் செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்ருர் குமரகுருபர முனிவர். இருப் பதைக் கொண்டு மனநிறைவு உடையராக இருக்கப் பழகில்ை போட்டியும் இல்லை; பொருமையும் இல்லை; எல்லாருடன் இன்ப மாகப் பழகவும் முடியும்; சகோதரத்துவம் ஒங்கும்; இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.