பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமான சுவாமிகள் பாடல் 91

உள் ளதே போதும் நான் நான் எனக்குளறியே Ulllla dē põdhum Ilā ol Il T1:1:111 enakkullarriyē

ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் onrrai vittu OTנITLI patrip பாசக்கடற்குளே வீழாமல் மனதற்ற Pasakkadarrkullē veezhaamal manadhatra

பரிசுத்த நிலேயை அருள்வாய் parisuththa nilaiyai arullvaay பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற Paarkkum idam enggum oru neekkamarra nirraiginra

பரிபூர னைந்தமே. ஒத்

pariptira nnaananthamē

ஆசைக்கு ஒர் அளவே கிடையாது; உலகமுழுவதும் ஒரு சேர ஆட்சிசெய்தாலும் கடல் மீதும் தன்னுடைய ஆணையைச் செலுத்தவேண்டும் என்று நினைப்பார்கள்.

அளகாபுரிக்குத் தலைவன் ஆகிய குபேரனுக்குச் சமமான பொன் நிறைய வைத்து இருப்பவர்கள் உண்டு; அவர்களும் இன்னும் பணம்வேண்டும் என்று விரும்பி ரசவாதவித்தை செய்ய அலேந்து திரிவார்கள்.

பல வருஷங்கள் உயிர் வாழ்ந்தவர்களும் நிலையாக வாழ வேண்டும் என்று நினைத்து அதற்காகக் காயகற்பம்** தேடி அலேந்து மனம் புண் ஆவர்.

இவற்றை எல்லாம் யோசித்துப்பார்த்தால் பசி அடங்குமாறு உண்பதும், பின் உறங்குவதும் ஆகவே முடிகிறது.

நமக்கு உள்ளதே போதுமானது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டுக்கொண்டு வாய்குழறி, மனம் ஆனது ஒன்றை விட்டு ஒன்றுபற்றிப் பாசம் (பற்று) என்னும் கடலிலே விழாதவாறு எனக்குப் பரிசுத்தமான நிலையைக் கொடுப்பாயாக.

பார்க்கும் இடங்களில் எல்லாம் சிறிதுகூட நீங்காமல் எங்கும்

நிறைந்து இருக்கிற முழுத்தன்மையுடைய மகிழ்ச்சி வடிவம் பொருந்தியவனே!

  • உலோகங்களை மாற்றும்படி செய்யும் வித்தை, * *காபகல்பம்; உடம்பு நீடித்து இருப்பதற்கு உண்கிற மருந்து.