பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நீத்தார் வழிபாடு

என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவோ Endrunee andru ITH HIT una dimai yallav b

யாதேனும் அறியாவெறும்" ya ade num arriya averrum துரும்பனேன் எனினும் கைவிடுதல் நீதியோ Thuru mbanen eninum kaividu dhal neethiyo

தொண்டரொடு கூட்டு கண்டாய் thon ndarodu kūttu kanndaay சுத்தநிர்க் குணமான பர தெய்வமே பாஞ் Suththa nirk gunnamaana paratheyvame paragn

ஜோதியே சுகவாரியே jödhiye sugavaariyē

கிடைப்பதற்கு அரிய பொன் போன்றவனே! மணி போன்றவனே !

என்னுடைய அன்பே எனக்கு அன்பாக இருக்கும் அறிவு மயம் ஆனவனே!

என் அறிவிலிருந்து ஊற்று எடுக்கும் ஆனந்த வெள்ளமே!

-என்று இவ்வகை (இறைவா!) உன் இனப் பாடினேன்; (பாடி) ஆடினேன்; ஆடி (நீ எங்கு இருக்கிருய் என்று) தேடினேன். பிறகு விருப்பத்தோடு கூவினேன்; நா வற்றினேன்; கதறினேன்; மெய் சிலிர்த்தது; இரண்டு கைகளையும் கூப்பினேன்; வானத்தில் இருந்து மழை பெய்வதுபோல என் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணிர் பொழிந்தது; விரும்பிச் சோர்வு அடைந்தேன்.

நான் இரும்பு போன்ற மனம் உடைய திருடன்; ஆயினும் உனை விட்டு இருந்தது உண்டோ? (இல்லையே!)

நீ எப்பொழுது முதல் இருக்கிருய்; அந்நாள் முதல் நான் இருக்கிறேன்; நான் உன் அடிமை அல்லவா? நான் ஒரு சிறிதும் அறியாத துரும்பு போன்றவன் ஆயினும், என்னைக் கைவிடுதல் உனக்குத் தருமம் ஆகுமோ?

நீ என்னைத் தொண்டர்களோடு சேர்ப்பாய்! து.ாய்மையும், குணம் இன் மையும் ஆன மேலான தெய்வமே! சிறந்த ஒளியே, இன்பமயமான க.லே!