பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

நெட்டால் தமிழ் வைதீக சபையின் சார்பில் நீத்தார் வழிபாடு' என்ற புதிய மலர் தற்போது மலர்ந்துள்ளது.

நால்வர் பாடல்களும், திருப்புகழும், திருஅருட்பாவுமே மிகுதியாகப் பழகியுள்ள நிலையில், இந்நூலில் கந்தரலங்காரப் பாடல் தாயுமானவர் பாடல் பட்டினத்தார் பாடல் ஆகியவற்றி லிருந்து மக்களின் தேவைக்கேற்பச் சீரிய சிலபாடல்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

நீத்தார் வழிபாட்டிற்குரிய பாடல்களை திருமுறை கலாநிதி திரு. இராஜசேகரன் அவர்கள் தொகுத்துத் தர அவற்றிற்குச் சிறப்பான முறையில் சிவநெறிச் செல்வர் திரு. கே. எம் வேங்கட ராமையா M.A. அவர்கள் உரைவிளக்கம் அளிக்க, கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் வாழ்த்துரையுடன் நல்ல முறையில் இந் நூலே திரு. N. C. நாயுடு அவர்கள் நமது கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள்.

நீத்தார் வழிபாட்டிற்காக முறையாகத் தொகுக்கப் பெற்ற இந் நூலே நமது நாட்டிலுள்ள அனைத்துச் சங்கங்களும், இம் முறையைப் பின்பற்றி வரவேற்க வேண்டுமென உளம் கனிந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நெட்டால் தமிழ் வைதீக சபை இங்ங்னம் Natal Tamil Vedic Society சி. ஜி. செட்டி Republic of South Africa. தலைவர்