பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம், மாணிக்கவாசகர் THIRUVASAKAM, MANICKKA WASAKAR

l (27)

இறைவன் எல்லாப் பொருள்களாக இருக்கிருன் என்பர் சிலர்; அப்பொருள்கள் அல்ல அவன் என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பொருள்களாக இருக்கிருன் என்பது அவனது சொரூப லகடினம். அதாவது அவனது உருவநிலை. எப்பொருளாகவும் இல்லை என்பது அவனது உண்மைநிலை. அதை அருவநிலை என்னலாம். இத் தகைய இறைவனை நாம் ஏன் புகழவேண்டும்? இதுவும் ஒரு கேள்விதான். உலகத்தில் உள்ள தலைவர்களைப் புகழ்ந்து பாடுகி ருேம் அல்லவா? எதற்காக? நாம் அவர்களுடைய அன்பைப் பெற்று வாழ்வதற்காக. அதுபோலவே இறைவனது அன்பைப் பெற இறைவனை வாழ்த்துவது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம்.

திருச்சிற்றம்பலம் நமச்சி வாய வா அழ்க ! நாதன் தாள் வாழ்க! Namachchivaaya vaaazhga ! naadhan thaall vaazhga ! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கள் தான் தாள்வாழ்க! Imaippozhudhum ennegnjii neenggaadhaan thaallvaazhga ! கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க! Kõgazhi aannda gurumannithan thaall vaazhga ! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ! Aagamam aaginindrru annnnippaan thaall vaazhga ! ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க! Egan anēgan irraivan adi vaazhga !

'நமசிவய' என்னும் திரு ஐந்தெழுத்து வாழ்க! தலைவன் ஆகிய சிவபெருமானுடைய திருவடிகள் வாழ்க! கண் இமைக்கும் அளவு நேரமும் என் மனத்தில் இருந்து நீங்காதவன் இறைவன், அவருடைய திருவடிகள் வாழ்க! கோகழி’ என்பது திருப்பெருந் துறை; அங்கு ஆட்சி செய்பவர் என் குருமணி, அவருடைய திரு வடிகள் வாழ்க! ஆகமங்களின் பொருளாக இருப்பவர்-இனிமை தருகிறவர்-அவருடைய திருவடிகள் வாழ்க! ஒருவன் ஆகவும் பல ஆகவும் இருப்பவர் இறைவன்; அவருடைய திருவடிகள் வாழ்க!

Long live “Na Ma Si Va Ya” the mystic five letterst Long

live the Feet of the Lord! Long live the Feet of Him who does

not leave my mind ever, for a little time! Long live the Feet of