பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம், மாணிக்கவாசகர் 73

திருச்சிற்றம்பலம்

யானேத் தோலே உரித்து அதனைப் போர்த்திக் கொண்டான், அவன் திருப்பெருந்துறையில் இருக்கும் சிவன் ஆவான். அவன் பித்தன் போன்ற வடிவைக் கொண்டவன். இந்த உலகத்தில் குழந்தையாகவும் இருப்பான். அவனே முத்தி தருவதற்குத் தலைவன். உத்தரகோச மங்கை என்ற தலத்தில் வள்ளல் ஆக விளங்குபவன். அவன் என் சித்தத்தில் புகுந்தான். அவன் புகுந்த விதத்தைப் பாடிக் கொண்டே அல்லிப்பூக்களைப் பறிப்போ மாக!

He peeled the skin of an elephant and covered Himself. He is the Lord at Tirupperunthurai. He takes the form of a mad man. He will also become a child in this world. He is the Lord who bless us with supreme bliss. He is the benefactor residing at Uttarakosamangai. He entered my mind. We shall sing the mode of entry and pluck the Alli flower.