பக்கம்:நீலா மாலா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 சிறுமி அதை நாடகமாக்கினுள். உங்கள் பாராட்டை அந்தச் சிறுமிகளிடம் சொல்லுகிறேன்.” "அப்படியா! சரி, அன்று நாடகம் கடத்தும் இடத்துக்கு காலைக்து போலீஸ்காரர்களை அனுப்பி வைக்கிறேன். ஜனங்களை ஒழுங்காக உட்கார வைக்க, அமைதி காக்க அவர்கள் உதவுவார்கள்.” "மிகவும் கன்றி. நாடகம் பார்க்க நீங்களும் அவசியம் வரவேண்டும். நீங்கள் வந்தால் குழந்தை களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.” . 'வரப் பார்க்கிறேன். நாடகம் வெற்றி பெற என் கல்வாழ்த்துக்கள்.” என்று கூறி, சப்-இன்ஸ் பெக்டர் சதாசிவம், தலைமை ஆசிரியரின் கையைப் பிடித்துக் குலுக்கி விடை கொடுத்தார். பெரிய பெரிய தட்டிகளிலும் அட்டைகளிலும் நாடக விளம்பரங்களை எழுதினர்கள். மாலாவுக் குத் துணையாகப் பள்ளிக்கூட டிராயிங் மாஸ்டரை யும் தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்திருந்தார். இருவரும் அழகாக விளம்பரங்களை எழுதினர்கள். முரளி கவர்ச்சியாக வர்ணம் தீட்டினன். பல வண் ணங்களில் தயாரான அந்த விளம்பரத் தட்டிகளும் அட்டைகளும் பூங்குடியிலும் சுற்றுப்புற ஊர்களி லும் உள்ள மரங்களிலும், பஸ் ஸ்டாண்ட், கடை வீதி போன்ற இடங்களிலும் காட்சி அளித்தன. அமரபுரத்தில் சந்தை கூடும் இடத்தின் முகப் பிலே இருந்த விளம்பரத்தைப் பார்க்காமல் யாரும் உள்ளே போக முடியாது! நண்பர்களுடன் சைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/101&oldid=1021660" இலிருந்து மீள்விக்கப்பட்டது