பக்கம்:நீலா மாலா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

* {}{} கிளில் ஏறி ஊர் ஊராகச் சென்று இப்படியெல்லாம் விளம்பரப் படுத்தியவன் முரளிதான் ! தலைமை ஆசிரியர் சொன்னது போல், கதை-நீலா, நாடக அமைப்பு-மாலா, டைரக்ஷன்-முரளி என்று எல்லா அட்டைகளிலும் விளம்பரப் படுத்தப்பட்டது. சிறுவர்களே இந்த நாடகத்தை நடத்து கிருர்கள் என்பதைக் கேட்டுச் சுற்றுப்புறத்து ஊர்களிலுள்ள குழந்தைக ளெல்லாம் தங்கள் பெற்ருேருடன் நாடகம் பார்க்க வந்துவிட்டார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை மாரியம்மன் கோவில் திருவிழாவில்-அதுவும் ஒன்பதாம் திரு விழாவில்தான்-காணலாம். காடகம் தொடங்கியது. ஒவ்வொரு காட்சி யையும் கூடியிருந்தோர் மிகவும் சுவைத்தார்கள்; பாராட்டினர்கள்; பலமுறை கைதட்டி மகிழ்ச்சி யைத் தெரிவித்தார்கள். காடகத்தில் பதினுேரு காட்சிகள் முடிந்து விட்டன. இதோ பன்னிரண்டாவது காட்சி. மேடையில் ஒரு பங்களாவின் ஒரு பகுதி தெரி கிறது. அங்கே மங்கலாகத் தெரியும் விளக்கு ஒளியில், ஒர் உருவம் அடிமேல் அடிவைத்துப் பூனேபோல் கடந்து வருகிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறது. கட்டிலில் படுத்திருக்கும் வீட்டுக் காரரைக் கண்டதும், அருகிலே செல்கிறது. தலை யணைக்கு அடியிலே மெதுவாகக் கையைக் கொடுத் துத் தடவிப் பார்க்கிறது. ஒன்றும் அகப்பட வில்லை. அப்போது வீட்டுக்காரர் விழித்துக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/102&oldid=1021661" இலிருந்து மீள்விக்கப்பட்டது