பக்கம்:நீலா மாலா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102 போட்டுவிட்டுச் சிறுமியின் அருகே ஒடுகிருன். அவளே அப்படியே கட்டி அனைத்து, இரு கன்னங் களிலும் மாறிமாறி முத்தம் கொடுக.கிருன். அப்போது வீட்டுக்காரர் சுவிட்சைப் போடு கிருர். விளக்கு பளிச்சென்று எரிகிறது. வெளிச் சத்தில், தன் முகத்தைக் காட்டவே திருடனுக்கு வெட்கமாக இருக்கிறது. தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு, முகத்தை மூடிக் கொள்கிருன். "அப்பா ! இன்னும் இந்தத் தொழிலே விட வில்லையா? இங்தத் திருட்டுத் தொழிலால்தானே கான் என் அம்மாவைப் பறிகொடுத்தேன்!” என்று கண் கலங்க அச்சிறுமி கூறுகிருள். “என்ன ! உன் அம்மாவைப் பறி கொடுத்து விட்டாயா ?’ என்று பதற்றத்துடன் கிமிாங்து பார்த்துக் கேட்கிருன் திருடன். "ஆமாம், இரண்டு வருஷத்துக்கு முன்னலே, உங்களைப் போலீஸ்காரர்கள் பிடித்துப் போனுர் களே, அதற்கப்புறம் அம்மா அதே கவலையிலே கோயாய்ப் படுத்து விட்டார்கள். இதோ நீங்கள் கொல்லப் போனிர்களே, இவர்கள் கட்டி வைத்த தரும ஆஸ்பத்திரியிலேதான் அம்மா பத்து நாள் படுக்கையிலே இருந்தார்கள். எவ்வளவோ மருந்து கொடுத்தும், எவ்வளவோ கவனமாகப் பார்த்தும் அம்மா பிழைக்கவில்லை. செத்துப் போளுர்கள். பெரிய டாக்டரம்மாவுக்கு என மேலே மிகவும் பிரியம். கான் அைைதயாகப் போன விவரத்தை டாக்டரம்மா இவர்களிடத்திலே சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/104&oldid=1021663" இலிருந்து மீள்விக்கப்பட்டது