பக்கம்:நீலா மாலா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

●7

கொள்ளைக்காரன் என்று பெயர் எடுத்துவிட்டேன். பத்து வருஷமாகப் போலீஸ்காரர்களுக்கு அகப் படாமலே இருந்த நான், போன வருஷம் சரியாக மாட்டிக்கொண்டேன். எனக்கு ஆயுள்தண்டனை கொடுத்தார்கள். ஆனல், ஆறு மாதத்திற்கு முன்னலே ஜெயிலிலிருந்து தப்பி ஓடி வந்துவிட் டேன். பிறகு என்ன என்னவோ வேஷமெல்லாம் போட்டுக்கொண்டு ஊர் ஊராகச் சுத்தினேன். ஆனல், திருட்டுத் தொழிலை மட்டும் விடவில்லை. இங்கே நாடகம் நடக்கிறதைக் கேள்விப்பட்டுச் சாமியார் வேஷத்திலே இங்கு வந்தேன். கூட்டத் தோடு கூட்டமாக ஒரு மூலையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நாடகத்திலே வந்த சில காட்சிகளைப் பார்த்து அப்படியே உருகிப் போனேன். என் இரும்பு மனசை இளக வைத்து விட்டது இந்தக் குழங்தைகள் போட்ட நாடகம்.” சங்கிலியாண்டி இதைச் சொன்னபோது, அவன் தொண்டை அடைத்தது. கண்கள் கலங்கின போன மாதம் கான் ஒரு வீட்டுக்குத் திருடப் போனேன். பீரோவை உ ைட த் து ப் பணப் பெட்டியை எடுக்கப் போன சமயம், வீட்டுக்காரர் விழித்துக் கொண்டார். ஐயோ! திருடன்! திருடன்! என்று கத்தினர். உடனே நான் பிச்சுவாக் கத்தியை அவருடைய கெஞ்சுக்கு நேரே கொண்டு போனேன். அப்போது ஏழு வயதான அவருடைய பெண் ஒடி வந்து, ஐயோ, அப்பாவை எதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/109&oldid=1021670" இலிருந்து மீள்விக்கப்பட்டது