பக்கம்:நீலா மாலா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஏழு பரிசுகள்! 'பாட்டுப் போட்டி-முதல் பரிசு-கே. நீலா’ என்ருர், பரிசு பெற்றவர்கள் பட்டியலைக் கையில் வைத்திருந்த தலைமை ஆசிரியர் தணிகாசலம், உடனே மேடையில் இருந்த ஓர் ஆசிரியர் ஒரு ஃபவுண்டன் பேணுவைக் கலெக்டரிடம் கொடுத் தார். ஆல்ை, கலெக்டரிடம் பேணுவைப் பெற்றுக் கொள்ள நீலா மேடைக்கு ஓடி வரவில்லை! ஏன்? நீலா அந்தக் கூட்டத்தில் இல்லையா? இருந்தாள். சுவர் ஒரமாக கின்றுகொண்டிருந்த அ வள து கவனம் எங்கோ இருந்தது. அவளது கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடித் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தன. தன் .ெ ப ய ைர த் தலைமை ஆசிரியர் கூப்பிட்டது அவள் காதில் விழவில்லை. 'முதல் பரிசு பெற்ற நீலா உடனே மேடைக்கு வருக' என்று மீண்டும் ஒரு முறை தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் கூறினர். 2124-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/11&oldid=795674" இலிருந்து மீள்விக்கப்பட்டது