பக்கம்:நீலா மாலா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 செய்திடாதே. என் அம்மா செத்துப் பத்து காள் கூட ஆகவில்லை. அப்பாவையும் கொன்று விடாதே’ என்று கதறிக் கதறி அழுதது. கான் அதை எவ்வளவோ மிரட்டிப் பார்த்தேன். அது சத்தம் போடுவதை நிறுத்தவில்லை. ஆத்திரத்திலே அந்தச் சின்னப் பெண்னை கான்....கான். நான்.... என் கத்தியாலே கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக் கொன்றுவிட்டுப் பனப் பெட்டியோடு தப்பி வந்துவிட்டேன். ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறுமியைக் கொன்றதற்குக் கடவுள் என்னை கன்ருகத் தண்டித்து விட்டார்.” சங்கிலியாண்டி சற்று நிறுத்தின்ை கண் களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான்; பிறகு தொடர்ந்தான்: "மறு நாள் குடுகுடுப்பைக்காரன் வேஷத்திலே சங்கரம்பட்டிக்குப் போனேன். கான் ஜெயிலுக்குப் போனபோது, அந்த ஊரிலேதான் என் சம்சாரமும், என் ஒரே மகள் மீனுவும் ஒரு வீட்டிலே இருங் தார்கள். ஆணுல், நான் போனபோது அந்த வீட்டில் யாருமே இல்லை. அக்கம் பக்கத்திலே விசாரித்துப் பார்த்தேன். என் ஏழு வயது மகள் மீனு பத்து காட்களாய்க் காய்ச்சலாய்க் கிடந்தாளாம். சாப் பாட்டுக்கே வழியில்லாமல் என் சம்சாரம் தவித்துக் கொண்டு இருந்தாளாம். பெண்ணுக்கு மருந்து வாங்க அவள் எங்கே போவாள் ? காய்ச்சல் அதிகமாகி என் மீன-என் அருமை மகள் மீனு . கண்ணே மூடி விட்டாளாம்...நான் ஒரு சிறுமியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/110&oldid=1021671" இலிருந்து மீள்விக்கப்பட்டது