பக்கம்:நீலா மாலா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

#12 தில் நடித்த குழந்தைகள் எல்லாரும் எங்கிருந்தோ மேடையை நோக்கித் துள்ளிக் குதித்துக்கொண்டே வேகமாக வந்தார்கள். அப்போது பரமசிவம் பிள்ளை, சப்-இன்ஸ் பெக்டர் சார் மேடைக்குச் சங்கிலியாண்டி வந்ததும் எல்லாரும் பயந்து போனுேம். ஒரு வேளை, இந்த நாடகம் தன்னைத்தான் குத்திக்காட்டுகிறது என்று அவன் நினைத்துவிட்டால்... . ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளை அவன் என்ன செய் வானே என்று பயந்து விட்டேன். ஸ்கூல் டிரா யிங் மாஸ்டரிடத்திலே சொல்லிக் குழந்தைகளை யெல்லாம் பின்பக்கமாக அழைத்துப்போக ஏற்பாடு செய்தேன். சிறிது தூரத்திலே என் தங்கை வீடு இருக்கிறது. அங்கேதான் இவர்கள் எல்லாம் இருங் தார்கள். உண்மையிலேயே சங்கிலியாண்டி திருந்தி விட்டான் என்று தெரிந்தவுடனே, ஆள் அனுப்பி அழைத்துவரச் சொன்னேன். அதற்குள்ளே நீங் களும் வந்து சேர்ந்து விட்டீர்கள்.' சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் குழந்தைகள் மத்தியிலே கின்று பேச ஆரம்பித்தார். ஒலி பெருக்கியில் அ வ ர து பேச்சு கணிரென்று கேட்டது : பொதுமக்களே ! சங்கிலியாண்டி இங்கு தானகச் சரண் அடைந்த நிகழ்ச்சி மிகவும் அபூர்வ மானது; அதிசயமானது. இந்தச் சங்கிலியாண்டி யைப் பிடிக்க எங்கள் போலீஸ் இலாகா எவ் வளவோ முயன்றது. இதற்காக காங்கள் போகாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/114&oldid=1021675" இலிருந்து மீள்விக்கப்பட்டது