பக்கம்:நீலா மாலா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120 டி. எஸ். பி. இப்படிச் சொன்னதும், சார், சார், கதையை எழுதியது கானுக இருந்தாலும், அதை எவ்வளவு அழகாக நாடகமாக்கியிருக் கிருள் மாலா! எவ்வளவு அருமையாக டைரக்ட் செய்திருக்கிருன் முரளி எவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறர்கள் எங்கள் சங்கக் குழந்தைகள்! சங்கிலியாண்டி அவர்களது உருக்கமான நடிப்பைப் பார்த்ததால்தான் மனம் திருந்தினன். அதனல் எல்லாருக்கும் பொதுவாக மாங்குயில் சிறுவர் சங் கத்துக்கே பரிசைக் கொடுத்துவிடுங்கள் சார்' என் ருள் நீலா. ஏழையாக இருந்தாலும், எவ்வளவு பரந்து விரிந்த மனம் கீலாவுக்கு இருக்கிறது என்பதை உனர்ந்து டி. எஸ். பி., சப்-இன்ஸ்பெக்டர், தலைமை ஆசிரியர் எல்லாருமே மிகவும் வியப்படைந்தார்கள். 'அடே, கீலா இவ்வளவு தூரம் விட்டுக் கொடுக் கிருளே! என்று மூக்கின் மேல் விரலை வைத்தாள் பார்வதி அம்மாள். டி. எஸ். பி. திருஞானமும், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவமும் விடைபெற்றுச் சென்ற பிறகும் பரம சிவம் பிள்ளை வீட்டில் கூட்டம் கலையவில்லை. மறு நாள் மாலை, மயிலைக் கா8ளகள் பூட்டிய வில்வண்டி பரமசிவம் பிள்ளை வீட்டின் முன்னுல் தயாராக கின்றது. அதன் பின்னல் இரண்டு வண்டிகள் கின்றன. அந்த ஊரே திரண்டு வந்து விட்டது, வழியனுப்பி வைக்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/122&oldid=1021684" இலிருந்து மீள்விக்கப்பட்டது