பக்கம்:நீலா மாலா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122 கூடாது நீலா’ என்று மீனுட்சி நீலாவை அனைத்துக்கொண்டு ஆறுதல் கூறித் தேற்றினுள். அப்போது, நீலா! நீலா!' என்று முரளி கூப் பிட்டான். உடனே, கீலா கண்ணைத் துடைத்துக் கொண்டு சென்ருள். மாங்குயில் சிறுவர் சங்கத்தை எப்படி எப்படி யெல்லாம் நடத்தலாம் என்பது பற் நறித் தலைமை ஆசிரியரும் பரமசிவம் பிள்ளையும் கூறிய யோசனைகளை நீலாவும் மற்றவர்களும் கேட் டார்கள். ரயில் வர இன்னும் கால் மணி நேரமே இருங் தது. அப்போது, ஒரு சிறுவன் வெகு வேகமாக அவர்கள் இருந்த இடத்துக்கு ஓடி வந்தான். அவன் முரளியிடம் சென்று, தன் கையிலிருந்த ஒரு பெரிய துணிப் பையைக் கொடுத்தான். முரளி, உள்ளே யிருந்து இரண்டு ரோஜா மாலைகளை எடுத்தான். தலைமை ஆசிரியரிடம் கொடுத்து, நீலாவுக்கும் மாலாவுக்கும் போடச் சொன்னுன். தலைமை ஆசிரியர் ஒரு மாலையை மாலாவுக்குப் போடப் போனர். ஆனல் மாலா கழுத்தை நீட்ட வில்லை. 'சார், சார், முதலில் கீலாவுக்குப் டோடுங்கள். எல்லாவற்றுக்கும் அவள்தான் காரணம்' என்ருள். 'இல்லை, இல்லை. மாலாவுக்குத்தான் முதல் மாலை' என்ருள் கீலா. இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் அவர்களே வழி யனுப்ப அங்கு வந்து சேர்ந்தார். உடனே, தலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/124&oldid=1021686" இலிருந்து மீள்விக்கப்பட்டது