பக்கம்:நீலா மாலா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

132 கிலோ, பேசாமல் வாங்கி அணிந்து கொள். கீயும் மாலாவும் எங்களுக்கு இரட்டைப் பிள்ளைகள் மாதிரி. உங்களுக்குள்ளே வித்தியாசமே கூடாது. டாக்டர் காலையில் மிகவும் கண்டிப்பாகச் சொல்லி யிருக்கிருர் என்ருள். 'ஏனம்மா, நாளைக்குப் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்களே, நீலாவைச் சேர்க்க வேண்டுமே !’ 'எல்லாம் உன் அப்பா முன்னதாகவே ஏற்பாடு செய்து பணமும் கட்டிவிட்டார். காளைக் காலையிலே கான் உங்களோடு வந்து, தலைமை ஆசிரியை யிடம் நீலாவை அறிமுகப்படுத்தப்போகிறேன் ..... அது சரி, நீலா, பட்டு ஆடையை உடுத்திக்கொள். சீக்கிரம் தயாராக வேண்டும்.' . களினி வற்புறுத்திச் சொன்னதும் நீலா பட்டுப் பாவாடையையும் சட்டையையும் அணிந்து கொண் டாள். தலை வாரி, பூச்சூடி இருவரும் டாக்டரின் முன்னுல் போய் கின்றதும், 'ஆ களினி ! இந்த இரட்டைக் குழந்தைகளைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக இருக்கிருர்கள்!” என்று ஆனந்தம் பொங் கக் கூறி, அவர்கள் இருவரையும் இரு கைகளால் அனைத்துக் கொண்டார். டாக்டர் எதிர்பார்த்தபடியே, அண்ணுககரில் இருக்கிற குழந்தைகள், பெரியவர்கள், இன்னும் வெளியிடத்திலே இருந்தும் பலர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். மாலாவையும் நீலாவை யும் மகிழ்ச்சியோடு பாராட்டினர்கள். மனமார வாழ்த்தினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/134&oldid=1021701" இலிருந்து மீள்விக்கப்பட்டது