பக்கம்:நீலா மாலா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

140 நாடகம் முடியப் போகும் சமயம் கவர்னரை மேடைக்கு அழைத் து வந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் நாடகத்தைப் பற்றிய விவ. ரங்களை எடுத்துக் கூறினர். நடித்த குழந்தைகளை யும் அறிமுகப்படுத்தினர். கவர்னர் பேசும்போது, நாம் சிறுவர்கள் தானே! கம்மால் என்ன நன்மை செய்யமுடியும்? என்று உதட்டைப் பிதுக்குகிறவர்களுக்கு இந்த காடகம் ஒரு நல்ல பாடத்தைப் போதிக்கிறது. இந்த நாடகம் அரங்கேறிய தினத்திலே அதிசயப் படும்படியான பலன் கிடைத்துவிட்டது. இந்த நாடகத்தில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று கூறிப் பரிசுத் தொகையைக் குழந்தைகளுக்கு வழங்கினர். ஒவ்: வொருவரும் பரிசு பெறும்போது அந்த மண்டபமே அதிரும்படி பொதுமக்கள் கைதட்டித் தங்களது. மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். காடகம் முடிந்து எல்லாரும் மகிழ்ச்சியாக விடு திரும்பினர்கள். மு ன் ன ல் டா க் டரி ன் கார் சென்றது. அதைத் தொடர்ந்து வேன் சென்றது. இரண்டிலும் குழங்தைகளும் பெரியவர்களும் கிரம்பி யிருந்தனர். சிறிது தூரத்தில் இவர்களைப் பின் தொடர்ந்து வெகு வேகமாக ஒரு பெரிய கார் வந்து கொண்டிருந்தது. அந்தக் காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர், உம், சீக்கிரம் போ. இன்னும் வேகமாகப் போ” என்று டிரைவரை அவசரப் படுத்திக் கொண்டிருந்தார். L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/142&oldid=1021712" இலிருந்து மீள்விக்கப்பட்டது