பக்கம்:நீலா மாலா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148 அன்று காலை, பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற் குக் கால்மணிநேரம் இருக்கும்போது டாக்டர் சூரிய சேகரின் கார், தலைமை ஆசிரியையின் அறைக்கு எதிரே வந்து கின்றது. காரை ஒட்டிக் கொண்டு வந்த மாலாவின் அம்மா நளினி, மாலா, நீலா மூவரும் காரிலிருந்து இறங்கினர்கள். மாலாவும் நீலாவும் கண்ணுடி போட்ட இரண்டு பெரிய படங் களைத் துரக்கிக்கொண்டு வந்தார்கள். தலைமை ஆசிரியைக்கு எதிரேயுள்ள சுவரில் அவற்றைச் சாய்த்து வைத்துவிட்டு வணக்கம் செலுத்தி ஞர்கள். 'நீலாவும் மாலாவும் பள்ளிக்கூடத்திற்காக இரண்டு படங்களை வரைந்திருக்கிருர்கள்......” என்று ஆரம்பித்தாள் நளினி. உடனே தலைமை ஆசிரியை எழுந்து அந்தப் படங்களின் அருகே வந்து பார்த்தார். ஒரு படத்தில் பொக்கை வாய்ப் புன்னகையுடன் காந்தித் தாத்தா இருந்தார். அவருடைய உருவத்துக்குக் கீழே, சத்தியம் பேசுதல் இவர்கொள்கை; தருமம் காத்தல் இவர்கொள்கை; இத்தல் மக்கள் யாவர்க்கும் இன்ப சுதந்திரம் இவர்கொள்கை. என்று எழுதப்பட்டிருந்தது. இன்னுெரு படத்தில் குழந்தைகளின் கண்ப ரான நேரு மாமா, அழகான ரோஜாப் பூவைக் கையில் வைத்திருந்தார். அவருடைய உருவத்துக் குக் கீழே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/150&oldid=1021723" இலிருந்து மீள்விக்கப்பட்டது