பக்கம்:நீலா மாலா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

150 வீட்டிலே படிப்புக்கு இடையூறு இல்லாமல், கேரம் கிடைக்கும் போதெல்லாம் நீலாவும் மாலாவும் பள்ளிக்கு வேண்டிய படங்களைத் தயாரித்தார்கள். ஒரே மாதத்தில் அவர்களது பள்ளியில் வகுப்புக்கு ஒரு படம் வீதம் காட்சி அளித்தது. மொத்தத்தில், நீலா அந்தப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்தே அங்கு ●@ @தூகலமும், கலகலப்பும் ஏற்பட்டு விட்டன. திட்டமிட்டபடியே பொன் மனம் திரைப்பட வேலை ஆரம்பமாகியது. படப் பிடிப்பில் கலந்து கொள்ள களினி, மாலா, நீலா, ரவி கால்வரும் பூங்குடி சென்ருர்கள். அவர்கள் அமரபுசத்தில் ரயிலில் வந்து இறங்கிய காட்சி முதலில் படமாக எடுக்கப்பட்டது. தொடர்ந்து படப் பிடிப்பு வேதில கள் நடைபெற்றன. பூங்குடியிலும் அமரபுரத் திலும் எடுக்க வேண்டிய காட்சிகளை யெல்லாம் எடுத்தார்கள். மாரியம்மன் கோயில் திறந்தவெளி அரங்கில், மாங்குயில் சிறுவர் சங்கக் குழந்தைகள் பொன் மனம் நாடகத்தை நடத்தினர். நாடகத்தைப் பார்க்க வந்த கூட்டம், முன்பு வந்த போலீஸ்காரர் கள், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் எல்லாரையுமே படம் எடுத்தார்கள். ஆனால், சங்கிலியாண்டியைத் தான் அங்கு கொண்டுவர முடியவில்லை. அவன் தான் சிறையில் இருக்கிருனே! அவனுக்குப் பதிலாக வேறு ஒருவரை நடிக்கச் செய்து படம் எடுத்தனர். அவரும் மிக அற்புதமாக நடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/152&oldid=1021725" இலிருந்து மீள்விக்கப்பட்டது