பக்கம்:நீலா மாலா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

#51 திரைப் படம் மூன்று மாதங்களில் தயாராகி விட்டது. பொங்கல் விழாவன்று பல இடங்களில் 'பொன் மனம் திரையிடப்பட்டது. அப்போது அமரபுரத்தில் உள்ள ஆனந்தா தியேட்டரிலும் அப்படத்தைத் திரையிட்டனர். பெரும் கூட்டம் அப்படத்தைப் பார்க்கத் திரண்டு வந்தது. அதற்கு முன்பு அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை ஆனந்தா தியேட்டரில் கண்டதே இல்லை ! 'பொன் மனம் வெற்றிப் படமாக அமைந்து பல நாட்கள் ஒடியது. பத்திரிகைகள் எல்லம் குழங்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் நடிப்பை மிகவும் பாராட்டின. இப்படிப்பட்ட புதுமையான படத்தை எடுத்த குளுளன் பிக்சர்ஸ் கோதண்டராமனையும் புகழ்ந்து எழுதின. முன்பு ஒப்புக்கொண்டபடி மாங்குயில் சிறுவர் சங்கத்துக்குக் குளுளன் பிக்சர்ஸ் ரூபாய் ஐம்பதா யிரம் கொடுத்தார்கள். அந்தத் தொகையை யார் யாருக்கு எப்படிப் பங்கிட்டுக் கொடுப்பது என்று புரியவில்லை. நீலா, மாலா இருவருக்கும் தலைமை ஆசிரியர் கடிதம் எழுதி அவர்களது யோசனையைக் கேட்டார். எங்கள் ஊர்ப் ப ள் எரி க் கூட ம் இப்போது கூரைக் கட்டிடத்திலே இருக்கிறது. மழை பெய்தால் ஒழுகும். பெரும் காற்று வந்தால் சொட்டகையே சாய்ந்து விடுமோ என்று நாங்க ளெல்லாம் பயப்படுவோம். மழை, புயல், தீ எதற்கும் பயப்படாமல் பிள்ளைகள் படிக்க வேண்டு மால்ை...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/153&oldid=1021726" இலிருந்து மீள்விக்கப்பட்டது