பக்கம்:நீலா மாலா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

155 மல் எழுத வேண்டும். கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி வருகிற செப்டம்பர் பதினைந்து. "இந்தியா முழுவதும் கடைபெறும் இப்போட்டி யில் மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதிய ஐந்து குழங்தைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த ஐவ ருக்கும் பரிசு உண்டு. என்ன பரிசு தெரியுமா ? “சோவியத் நாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு ஆர்த்தெக் என்ற குழந்தைகள் முகாமில் ஒரு மாதம் தங்கியிருக்க ஏற்பாடு செய்வார்கள். அழகிய அந்த முகாமிலே ஆனந்தமாகப் பொழுது போக்கலாம். அந்த முகாம், கருங்கடல் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே-அதன் கரையில்தான் இருக்கிறது . முயற்சி செய்யுங்கள். நவம்பர் 14ஆம் தேதி நேருஜி பிறந்த நாளில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். கட்டுரையை சோவி யத் நாடு நேரு பரிசுக் குழு, புது தில்லி-1 என்ற விலாசத்துக்கு அனுப்ப வேண்டும். முழு விலாசமும் என்னிடம் இருக்கிறது. தேவையானவர்கள் பெற். றுக் கொள்ளலாம்.' அன்று வீடு திரும்பும்போது, நீலா, காலே யிலே நம் தலைமை ஆசிரியை சொன்னர்களே, அந்தப் போட்டிக்கு நீ ஒரு கட்டுரை எழுது. பரிசு கிடைக்கும்’ என்ருள் மாலா. 'நான்தான் எழுத வேண்டுமா ? நீ எழுது.” கலோ, உனக்குத்தான் என்னைவிட கிறைய விஷயம் தெரிந்திருக்கிறது. பள்ளிக்கூட நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/157&oldid=1021730" இலிருந்து மீள்விக்கப்பட்டது