பக்கம்:நீலா மாலா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கலெக்டர் கம்பீரமாக எழுந்து நின்றார். ஒலி பெருக்கியின் முன்பு உற்சாகமாகப் பேசினார் : காந்தி மகான் பெயரை இந்தப் பள்ளிக்கு வைத்திருக்கிறீர்கள். பெயருக்கு ஏற்றபடி இந்தப் பள்ளி நன்முறையில் நடந்து வருவதை நான் ஈன்றாக அறிவேன். குழந்தைகள் நடத்திய நாடகம், நாட்டியம் எல்லாம் எவ்வளவு சிறப்பாக இருந்தன . பெரிய பட்டணங்களில்கூட இப்படி நான் கண்டதில்லை. இவை எல்லாவற்றையும்விட கான் மிக உயர்வாக நினைப்பது எது தெரியுமா? ஒரே சிறுமி ஏழு பரிசுகளைப் பெற்றாளே, அது நான்! அந்தச் சிறுமியைப் பற்றிய விவரங் களைத் தலைமை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஏழையாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் அவள் கெட்டிக்காரியாக இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இச்சிறுமிக்கு. உக்கப் அளித்து, உதவியும் செய்தால், எதிர் காலத்தில் இவள் மிகவும் சிறந்தவளாக, நாடு போற்றும் நல்லவளாக, ஒரு தலைவியாக விளங்கி னாலும் விளங்கலாம். இந்தப் பள்ளியில் ஐந்து வகுப்பு வரையில்தான் இருக்கிறது. இந்த ஆண் குடன் இவளது படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டியதுதானா? இங்கிருந்து நான்கு மைல் தூரத்தில் உயர்நிலைப் பள்ளி இருக்க கிறது. அங்கு அனுப்பி இவளைப் படிக்க வைக்க வேண்டும். இந்த நல்ல காரியத்தைச் செய்ய இந்த ளில் உள்ள பணக்காரர்களில் யாரேனும் முன்வந்தால் நல்லது. அப்படி யாருமே முன் வராது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/16&oldid=1037068" இலிருந்து மீள்விக்கப்பட்டது