பக்கம்:நீலா மாலா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 போனுலும், கவலைப்பட வேண்டாம். தலைமை ஆசிரியர் எனக்குத் தகவல் கொடுத்தால் என்னுல் முடிந்ததை நிச்சயம் செய்வேன்.' கலெக்டர் இப்படிக் கூறியதும், தலைமை வகித்த பரமசிவம் பிள்ளை கலெக்டரிடம் மெது வாக ஏதோ சொன்னர். உடனே கலெக்டர், ஒரு மகிழ்ச்சியான செய்தி. தலைமை தாங்கும் பரமசிவம் பிள்ளை அவர்களே இச் சிறுமியை எஸ். எஸ். எல். சி.வரை படிகக வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிரு ராம். புத்தகங்கள், துணிமணிகள் வாங்கவும், தினமும் இங்கிருந்து பஸ்ஸில் போய் வரவும், இன்னும் படிப்பு சம்பந்தமான எல்லாச் செலவு களையும் அவரே ஏற்றுக் கொள்கிருராம். அவரை என் சார்பிலே, உங்கள் சார்பிலே, மாணவர்கள் சார்பிலே பாராட்டுகிறேன்' என்ருர். உடனே அந்தப் பள்ளிக்கூடமே அதிரும்படி, கூடியிருந்தோர் பலமாகக் கை தட்டி மகிழ்ச்சி யைத் தெரிவித்தனர். 'சரி, இப்போது வெள்ளிக் கோப்பையை நீலாவுக்கு வழங்குகிறேன் ' என்று கூறிக் கோப்பையைக் கையிலே எடுத்தார் கலெக்டர். ஆல்ை, நீலா மேடைக்கு வரவில்லை. 'நீலா, உடனே மேடைக்கு வரவும்' என்ருர் தலைமை ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/17&oldid=1021566" இலிருந்து மீள்விக்கப்பட்டது