பக்கம்:நீலா மாலா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

169 சொல்லிக் கொடுத்த சில பாடல்களைப் பாடு கிருர்கள்’ என்ருர் டாக்டர். 'அப்புறம் என்ன ? இவர்களுக்குப் பாடவும் தெரியும். ஆடவும் தெரியும். ஆடலும் பாடலும் மொழி தெரியாதவர்களைக்கூட எளிதிலே கவர்ந்து விடுமே! இன்னுென்றையும் கான் சொல்ல வேண் டும். ரஷ்ய காட்டுக் குழந்தைகள் உங்களுக்குச் சிறு சிறு பரிசுகளைக் கொடுப்பார்கள். நீங்களும் பதி லுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா ? முடிக் தால் சில பரிசுப் பொருள்களைக் கொண்டுபோவது நல்லது’ என்ருர் பேராசிரியர். அன்று முதல், பேராசிரியர் சொன்னபடி இந்தி யாவைப் பற்றி கிறையத் தெரிந்து கொண்டார்கள். ரஷ்யாவைப் பற்றியும் அறிந்து கொண்டார்கள். ரஷ்யக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகப் பல பரிசுப் பொருள்களைச் சேகரித்தார்கள். பளிங்கிலே செய்த தாஜ்மஹால், கருங்கல்லிலே செய்த மகா பலிபுரத் தேர், கண்ணுடியிலே செய்த கபாலீஸ் வரர் கோயில், தந்தத்திலே செய்த யானே. தலைவர் களின் படங்கள் போட்ட தபால் தலைகள், தஞ்சா ஆர்ப் பொம்மை போன்ற சில பொம்மைகள், மகாத்மா காந்திக்குப் பிடித்த மூன்று குரங்குகளின் பொம்மை, பைக்குள் அடங்கக் கூடிய அளவிலே திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்புப் புத்த கம், காந்திஜியின் வாழ்க்கையை எடுத்துக் கூறும் சித்திரக் கதைப் புத்தகத்துடன் இன்னும் சில சிறுவர் புத்தகங்கள்-இப்படிப் பலவற்றையும் 2124–11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/171&oldid=1021748" இலிருந்து மீள்விக்கப்பட்டது