பக்கம்:நீலா மாலா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

173 அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்களாகி விட் டார்கள். விதம் விதமான பாட்ஜுகளையும், சோவி யத் காட்டின் அற்புதமான காட்சிகளுடன் கூடிய அஞ்சல் அட்டைகளையும், வண்ண வண்ணத் தபால் தலைகளையும் பல ரஷ்யக் குழந்தைகள் அவர் களுக்குப் பரிசாக அளித்தார்கள். - ஆர்த்தெக்கில் பல முகாம்கள் இருந்தன. ஒவ்வொரு முகாமிலும் நாற்பது சிறுவர் சிறுமியர் இருந்தனர். அவர்களுக்கு ஆண் லீடர், பெண் லீடர் என்று இரண்டு லீடர்கள் இருந்தார்கள். இக் தியக் குழந்தைகளை அவர்களது முகாம்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர்கள். டில்லியிலிருந்து வந்த சந்த்ரேஷாம், கீரஜாவும் ஆறு ரோஜாச் செடிகளைப் பதியன் போட்டுப் பத்திரமாகக் கொண்டு வந்திருந்தார்கள். அன்று மாலை நல்ல ஒர் இடமாகப் பார்த்து, அங்கு ஆறு பேரும் ஆளுக்கு ஒரு செடியாக கட்டார்கள். ரஷ்யக் குழந்தைகள் சுற்றிலும் கின்று வேடிக்கை பார்த் தார்கள். நேரு பரிசு பெற்ற காங்கள், நேருவுக்கு மிகவும் பிடித்தமான ரோஜாச் செடிகளை இங்கு கட்டு வைத்திருக்கிருேம். இச்செடிகள் கன்கு பூத்துப் பல மலர்களைத் தரப் போகின்றன. இங்கு வரும் நண்பர்களுக்கு அந்த மலர்களைப் பார்க்கும் போதெல்லாம் நேரு மாமாவின் கினைவு வரும். அத்துடன் எங்கள் நினைவும் வருமல்லவா?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னுள், நீரஜா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/175&oldid=1021753" இலிருந்து மீள்விக்கப்பட்டது