பக்கம்:நீலா மாலா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

175 குழந்தைகள் தெரிந்து கொண்டார்கள்; வாழ்த்தும் தெரிவித்தார்கள். - - சிலர் நீலாவின் கையைப் பிடித்துக் குலுக்கி னர்கள்; சிலர் இனிப்பு வழங்கினர்கள்; வேறு சிலர் மலர்களைக் கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவித் தார்கள். இப்படி கானூறு பேரும் சேர்ந்து வாழ்த்தியபோது நீலா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த முகாமில் உள்ள ரஷ்யக் குழந்தைகள் அனைவரையுமே இளம் முன்னுேடிகள்' என்றுதான் குறிப்பிடுவார்கள். அவர்கள் கழுத்தில் சிவப்பு டை அணிந்திருப்பார்கள். இந்தியக் குழந்தைகளுக்கும் அவர்கள் சிவப்பு டை அணிவித்து, அவர்களையும் கெளரவ இளம் முன்னேடிகளாக்கி விட்டார்கள். முகாமில் இருந்தபோது இந்திய தினம் என்று ஒரு காளைக் கொண்டாடினர்கள். அதை யொட்டி ஒரு காட்சி நடந்தது. நான்கு காட்கள் முன்பே, இந்தியக் குழந்தைகளுக்கு ஏராளமான டிராயிங் தாள்களையும், அட்டைகளையும், வர்ணப் பெட்டிகளையும் கொடுத்திருந்தார்கள். கல்கத்தா விலிருந்து வந்த நரேஷ், யானை, மயில் போன்ற பல வண்ணப் படங்களை அழகாக வரைக் திருந்தான். மாலாவும் நீலாவின் உதவியுடன் டில்லியில் பார்த்த குதுப்மினர், செங்கோட்டை, ஆக்ராவில் கண்ட தாஜ்மஹால்போன்ற படங்களை அழகாக வரைந்திருந்தாள். நேரு மாமா-லெனின் மாமா புத்தகத்திற்கு அவள் வரைந்திருந்த படங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/177&oldid=1021756" இலிருந்து மீள்விக்கப்பட்டது