பக்கம்:நீலா மாலா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176 களுடன், ஏற்கெனவே அவள் ஊரில் வரைக் திருந்த படங்களையும் காட்சியில் வைத்திருந்தாள். கேரளாவிலிருந்து வந்த ரேகா வரைந்திருந்த உழவர், மீனவர், நெசவாளர், கதகளி கடனக் கலைஞர் ஆகியோரின் படங்களையும் ரஷ்யக் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். அக்காட்சியில் காந்திஜி, நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களின் படங்களும் வைக்கப் பெற்றிருந்தன. அவற்றுடன் இந்தியக் குழங்தைகள் கொண்டு சென்ற பல கலைப் பொருள்களையும் ரஷ்யக் குழந்தைகள் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். அன்றுகோஸ்ட்ரோவையா' என்ற சதுக்கத்தில் உயர்ந்த கம்பத்தில் பட்டொளி வீசிப் பறந்தது இங் தியக் கொடி! இந்தியக் குழந்தைகள் ஜனகன மன கீதம் பாடி முடித்ததும், அவர்களுக்கு ரஷ்யக் குழந்தைகள் வாழ்த்துக் கூறினர்கள். மாலையில் இந்தியக் குழங்தைகளின் கலை நிகழ்ச்சி கடந்தது. ரோகவின் கதகளி நடனமும், நீலாவின் கரக ஆட்டமும் ரஷ்யக் குழந்தைகளை மிகவும் கவர்ந்து விட்டன. காய், பூனே, கோழி கத்துவது போல வும், ரயில், ஸ்கூட்டர், ஏரோப்ளேன் வேகமாகச் செல்வது போலவும் கரேஷ் மிமிக்ரி செய்தான். சங்த்ரேஷ் மாஜிக் நிபுணராக வங்து பல மாயா ஜால வித்தைகளைச் செய்து காட்டினன். நீரஜா, நேருஜியைப் போல வெள்ளை உடை அணிந்து, தலையில் வெள்ளைத் தொப்பி வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/178&oldid=1021758" இலிருந்து மீள்விக்கப்பட்டது