பக்கம்:நீலா மாலா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

178 தட்டி எல்லாரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித் தார்கள். '1961ஆம் ஆண்டு நேருஜி இங்கு வந்தபோது அவருக்குச் சிவப்பு டை கட்டியதாகப் புத்தகத் திலே படித்தேன். அது இப்போது என் கினைவுக்கு வந்தது. அதனுல்தான் நேரு மாமாவைப் போல் வந்த சகோதரி நீரஜாவுக்கு டை கட்டிவிட்டேன்’ என்ருள் அச்சிறுமி. இந்தியக் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைத் தனியாகவும், சேர்ந்தும் பாடினர்கள். எல்லாவற்றையும்விட நீலாவும் மாலாவும் ஆடிய குறவன்-குறத்தி கடனத்துக்கு கல்ல வரவேற்பு இருந்தது. முகாம் முடிவதற்கு முதல் நாள் மாலை, ரஷ்யக் குழந்தைகள் நடனங்கள் ஆடியும், பாடல்கள் பாடியும் எல்லாரையும்-குறிப்பாக இந்தியக் குழந்தைகளை மகிழ்வித்தார்கள். முப்பது நாட்களும் முப்பது கிமிஷங்களாக ஒடிவிட்டன. இந்தியக் குழந்தைகள் விடைபெற். றுத் திரும்பும்போது பல ரஷ்யக் குழந்தைகள் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்கள். இந்தியக் குழங்தைகளும் தாங்கள் கொண்டுவந்த பரிசுகளை கண்பர்களுக்கு அளித்தார்கள். பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள். "மகிழ்ச்சியோடு செல்லுங்கள்; மறுபடியும் வாருங்கள்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/180&oldid=1021761" இலிருந்து மீள்விக்கப்பட்டது