பக்கம்:நீலா மாலா.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

189 ரிடம், டாக்டர்,நானும் நாளை உங்களுடன் சென்னை வருகிறேன். நீலாவுக்கு வைத்தியம் பார்க்க என்ன செலவானுலும், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது என் கடமை. இந்த விபத்தே என்னுல் ஏற். பட்டதுதானே !' என்று மனம் உருகிக் கூறினுள். 'உங்கள் மேல் எந்தக் குற்றமும் இல்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. சென்னை சென்ற தும் உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள். நீலாவின் கிலைமை பற்றி அவ்வப்போது டெலி போனில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என் ருர் டாக்டர் சூரியசேகர். மறுநாள் விமானத்தில் நீலா, மாலா, டாக்டர் சூரியசேகர், மீனுட்சி அம்மாள், ரேனுகா தேவி ஆகிய ஐவரும் புறப்பட்டுச் சென்னை வந்து சேர்க் தார்கள். 'காலிங் பெல்’ சத்தம் கேட்டதும், மாலாவின் அம்மா நளினி விரைந்துவந்து கதவைத் திறந்தாள். மறுநாள் காலையில் ரயிலில் வருவதாக இருந்த வர்கள், ஒரு நாள் முன்னதாகவே வந்ததைக் கண்ட தும், அடே, இன்றே வந்து விட்டீர்களே!’ என்று மகிழ்ச்சி பொங்க வரவேற்ருள். டாக்சியிலிருந்து இறங்கிய நீலாவைப் பார்த்த தும், 'என்ன நீலா கண்ணிலே கட்டு ' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள். வீட்டுக்குள் சென்றதும், எல்லாவற்றையும் விவரமாக மாலாவும் டாக்டர் சூரியசேகரும் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/191&oldid=1021790" இலிருந்து மீள்விக்கப்பட்டது