பக்கம்:நீலா மாலா.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

191 செவிடாகவும் இருந்த அந்த அம்மையார், கல்லூரி யிலே படித்துப் பட்டம் பெற்ருராம்; நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்தாராம்; அவரே ஏழு புத்தகங்களை எழுதினுராம். உலகின் பல பாகங்களுக்கும் சென்று சொற்பொழிவு செய்தா ராம். இந்தச் சென்னைக்குக்கூட ஒரு முறை வங் திருந்தாராம். அவருடைய அதிசய வாழ்க்கை யைத் திரைப்படமாகக்கூட எடுத்திருக்கிருர்களாம். இரண்டு கண்ணும் இல்லாதபோதே அந்தஅம்மாள் பற்பல அற்புதங்களைச் செய்திருக்கிருர்களே, எனக்கு ஒரு கண் போனல்கூட... ' 'நீலா, அப்படியெல்லாம் சொல்லாதே’ என்று குறுக்கிட்டுக் கூறினுள் மாலா. மறு நாள் காலே, டாக்டர் வேங்கடசாமி நீலா வின் கண்ணேப் பரிசோதித்தார். புண் ஆறுவ தற்கு மருந்து போட்டுக் கட்டினுர், கிச்சயம் குன மாகிவிடும் என்று உறுதி கூறினர். ஒரு காள் மாலை, டாக்டர் வேங்கடசாமி டாக்டர் சூரியசேகரிடம், இன்று மத்தியானம் ஒருவர் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு, தான் இறந்ததும் தன் கண் விழிகளே யாருக்காவது தானம் செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுத் திருக்கிருர், அவருடைய விழிகளில் ஒன்றை எடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லியிருக் கிறேன். நீலாவுக்கு நாளையே அதை வைத்து ஆபரேஷன் செய்துவிடலாம்” என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/193&oldid=1021792" இலிருந்து மீள்விக்கப்பட்டது