பக்கம்:நீலா மாலா.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 இதோ கட்டை அவிழ்க்கப் போகிறேன்' என்று கூறிக்கொண்டே நீலாவின் கண்ணிலிருந்த கட்டை அவிழ்த்தார் டாக்டர் வேங்கடசாமி. பிறகு, இடது கண்னை நன்ருக மறைத்துவிட்டு, லோ, இப் போது எங்களையெல்லாம் தெரிகிறதா?” என்று கேட்டார் 'ஓ! நன்ருகத் தெரிகிறது. இதோ என் அம்மா. இதோ ரவி. இதோ மாலா' என்று ஒவ்வொரு வராகச் சொன்னுள். அவள் சொல்லச் சொல்ல எல்லாருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது, சார், தபால்!” என்ற குரல் கேட்டது. உடனே மாலா ஒடிச் சென்று தபால்காரரிடம் கடிதங்களை வாங்கி வந்தாள். அவற்றில் பெரிய அளவில் ஒரு பத்திரிகை இருந்தது. அதன் மேல் உறையைப் பிரித்து அட்டையைப் பார்த்தாள். 'அடே, சோவியத் நாடு’ பத்திரிகை! நீலா, இடது கண்ணை முடியபடி இங்த அட்டைப் படத்தைப் பார். இதில் யார் யார் இருக்கிருர்கள் ?’ என்று கேட்டாள் மாலா, 'அடடே, நேரு பரிசு பெற்ற நம் ஆறு பேரை யும் அட்டையிலே போட்டிருக்கிருர்களே! இதோ மாலா, நீரஜா, ரேகா, நரேஷ், சந்த்ரேஷ் !’ "அது சரி, சுற்றி ஐந்து வட்டங்களிலே நாங்கள் ஐந்து பேரும் இருக்கிருேம். நடுவிலே அழகாகச் சிரித்துக்கொண்டு நிற்பது யார் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/195&oldid=795816" இலிருந்து மீள்விக்கப்பட்டது