பக்கம்:நீலா மாலா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 கல்ல வேளை, கடவுள்தான் காப்பாற்றினர்’ என்ருள் நீலா. கீலா சொன்னதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், சே, இப்படியும் ஒரு விளையாட்டா ? வீண் வதந்தியைக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்ப்பதா? ஒருவனுக்கு வேடிக்கை, எத்தனை பேருக்கு வேதனை ' என்று ஆத்திரத்துடன் கூறினர். சகீலா, முரளிதானே உன்னிடம் பொய் சொன்னது ? என் தங்கை மகன் முரளிதானே ? வரட்டும். அவனே கான் என்ன செய்கிறேன், பார்” என்று சீறிஞர் பரமசிவம் பிள்ளை. 'பாவம், முரளி என்ன பண்ணுவான் ? அவனி டத்திலே யாரோ ஒர் அம்மா சொல்லியிருக்கிருர்கள். என்ன அவனுக்கு நன்ருகத் தெரியும் எனபதால் உடனே ஒடிப்போய் நீலாவிடம் சொல்லியிருக் கிருன், அவன் மேலே குற்றம் சொல்லக்கூடாது' என்ருள் நீலாவின் அம்மா. இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விழா முடிந்து, கடந்து வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். நீலாவின் குடி சையின் முன்பு கலெக்டரின் காரும், ஒரு சிறு கூட்டமும் கிற்பதைக் கண்ட அவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு, அங்கிருந்த சிலரைக் கேட்டு கடந்ததைத் தெரிந்துகொண் டார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/26&oldid=1021575" இலிருந்து மீள்விக்கப்பட்டது