பக்கம்:நீலா மாலா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 'இதோ இவையெல்லாம் நீலா வாங்கிய பரிசுகள்: ஒவ்வொரு தடவை பரிசு வாங்கியதும் என்னிடத்திலேதான் தங்து வைத்தாள்’ என்று கூறினுள், நீலாவின் தோழியான கோமளா. இரண்டு கைகளாலும் துக்கிவந்த பரிசுகளை அவள் மீட்ைசி அம்மாளின் முன்னுல் வைத்தாள். அரிக்கேன் விளக்கில் அவைகளைப் பார்த்தாள் மீனுட்சி அம்மாள். அப்போது, கலெக்டர் தம் முடைய கார் டிரைவரிடம், காரை இப்படிக் குடி சைக்கு முன்னல் கொண்டுவந்து நிறுத்தி, முன் விளக்குகளைப் போடு” என்ருர், அவ்வாறே கார் நிறுத்தப்பட்டது. காரின் பிரகாசமான வெளிச் சத்தில் பரிசுப் பொருள்கள் பளிச் சென்று தெரிங் தன. கண் குளிரக் கண்டாள் மீனுட்சி அம்மாள். ஃபவுண்டன் பேணு, புத்தகப் பெட்டி, பிளாஸ் டிக் வாளி, பூக்கூடை, புத்தகம், எவர்சில்வர் தட்டு, வர்ணப்பெட்டி! அவை ஒவ்வொன்றையும் கையில் எடுத்துப் பார்த்தாள் மீட்ைசி அம்மாள். அப்போது அவள் முகத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சி பொங் கியது. நீலா முகத்தில் அந்த மகிழ்ச்சி இரண்டு மடங்காகப் பிரதிபலித்தது. 'அம்மா! இவர்கள்தான் நமது மாவட்டக் கலெக்டர். இவர்கள் கையாலேதான் இந்தப் பரிசு களேயெல்லாம் வாங்கினேன்.” என்ருள் நீலா. மீனுட்சி அம்மாள் கலெக்டரைக் கையெடுத்துக் கும்பிட்டாள். 2 I 24–2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/27&oldid=1021576" இலிருந்து மீள்விக்கப்பட்டது