பக்கம்:நீலா மாலா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 'அம்மா! உண்மையிலேயே நீங்கள் பாக்கியம் செய்தவர்கள். உங்களுடைய பெண் படிப்பிலே, பண்பிலே சிறந்தவளாக இருக்கிருள். இவளே நீங்கள் நன்ருகப் படிக்க வைக்க வேண்டும். பரம சிவம் பிள்ளே வேண்டிய உதவியைச் செய்வதாகச் சொல்லி யிருக்கிருர். கிச்சயம் அவர் சொன்னபடி செய்வார். இந்தப் பெண்ணின் படிப்பு சம்பந்தமாக என்னுலே முடிந்த உதவிகளை நானும் செய்வேன்’ என்ருர் கலெக்டர், உடனே மீனுட்சி அம்மாள், இவளுடைய அப்பா எத்தனையோ பேருக்கு உதவியிருக்கிருர். கடைசியிலேகூட ஒரு குழந்தைக்காக அவர் தம் உயிரையே கொடுத்தார். தருமம் தலை காக்கும் என்று சொல்வார்கள். அவர் செய்த உதவியும் தியாகமும்தான் இப்படி உங்களைப் போன்ற நல்ல வர்கள் உருவத்தில் வந்திருக்கிறது...எங்களாலே உங்களுக்கு எவ்வளவோ சிரமம்... ' என்று நன்றி போடு கூறினுள்.

  • மிஸ்டர் தணிகாசலம் ! அந்த வெள்ளிக் கோப்பையை இந்த இருட்டிலே கொடுக்க வேண் டாம். காளைக் காலையிலே கொண்டுவந்து நீலா விடத்திலே, என் சார்பிலே கொடுத்துவிடுங்கள்’ என்று கூறி கலெக்டர் எல்லாரிடத்திலும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

நீலாவின் அப்பா ஒரு குழந்தைக்காக உயிரைக் கொடுத்தார் என்பது அந்தப் பகுதியிலே உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/28&oldid=1021579" இலிருந்து மீள்விக்கப்பட்டது