பக்கம்:நீலா மாலா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 இந்தக் குடிசைக்குள் ஒரு குழந்தை' என்று உரக்கக் கூவினர். தீப் பிடிப்பதற்கு முன்பு அந்தக் குழந்தையும், சரியாகக் கண் தெரியாத அதன் பாட்டியும் அந்தக் குடிசையில் இருந்தார்கள். தீப் பிடித்தவுடன் சப்தம் கேட்டுப் பாட்டி வெளியில் ஒடி வந்து விட்டாள். குழந்தை உள்ளே தூங்கிக் கொண் டிருந்தது அவளுக்குத் தெரியவில்லை. வெளியிலே விளையாடிக் கொண்டிருப்பதாக கினைத்து, அதன் பெயரைச் சொல்லி வீதியிலே கத்திக் கொண் டிருந்தாள். தீப்பிடித்ததும், சூடு தாக்கியதால் விழித்துக் கொண்ட குழந்தை, வீரிட்டு அலறியது. அது கதறுவதை அறிந்ததும் குமாரசாமி வேகமாக உள்ளே பாய்ந்தார். குழந்தையைத் து க் கி த் தோளிலே போட்டுக்கொண்டார். வெளியே ஒடி வருவதற்குள், வாசல் பக்கமும் தீ பரவிவிட்டது. வேறு வழியில்லை. சுற்று முற்றும் பார்த்தார். நல்ல வேளையாக அங்கு ஒரு தகரப் பீப்பாய் இருக் தது. அதற்குள் குழந்தையை வைத்து வாசல் வழியாக உருட்டி விட்டார். குழந்தை பிழைத்துக் கொண்டது! ஆல்ை, குமாரசாமி...... ? குமாரசாமியால் வெளியே வர முடியவில்லை! தீயிலும் புகையிலும் அவர் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, கூரையின் உச்சி யில் குறுக்கே இருந்த கனத்த மூங்கில் மரம் சடசட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/33&oldid=1021584" இலிருந்து மீள்விக்கப்பட்டது