பக்கம்:நீலா மாலா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

33 தைங்து ரூபாய் சம்பளமும் கிடைத்தன. சிக்கன மாகக் குடும்பத்தை நடத்திக்கொண்டு, நீலாவையும் கன்ருகப் படிக்க வைத்தாள். நீலா முதல் வகுப்பி லிருந்து ஒவ்வொரு வகுப்பிலும் முதலாவதாகத் தே றி ன ள். பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்ருள். அம்மா தன் மகளை கினைத்து நினைத்துப் பெருமைப்படுவாள். கலெக்டரிடம் நீலா பரிசுபெற்ற காட்சியை நீலாவின் அப்பாதான் பார்க்க முடியவில்லை. அம்மா வாவது பார்த்திருக்கலாமே!

நீலா, எப்படியும் விழாவுக்கு வந்து, கீ பரிசு வாங்குவதைப் பார்க்க வேண்டும் என்றுதான் கினைத்தேன். ஆனல், நான் புறப்படுகிற நேரத் தில், கம் எஜமானி அம்மாளுக்கு அடிக்கடி வருமே, அந்த வியாதி வந்துவிட்டது. தலை சுற்றியது; மயக்கம் வந்தது. ஐயாவும் விழாவுக்கு வந்துவிட் டார்கள். அந்த நிலைமையிலே அந்த அம்மாளைத் தனியாக விட்டுவிட்டு வரலாமா? கடைசியில், அம்மாவுக்கு மயக்கம் தெளிந்து எழுந்தபோது, இருட்டிப் போய்விட்டது. நேராக வீட்டுக்குவந்து விட்டேன்' என்று நீலாவுக்கு அன்று இரவு சமா தானம் சொன்னுள் மீனுட்சி அம்மாள்.

முதல் நாள் ஆண்டு விழா நடந்ததால், மறு காள் பள்ளிக்கு விடுமுறை. அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு நீலாவின் அம்மா வீடு திரும்பி வங்தாள். நீலா! உனக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். நாளைக் காலையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/36&oldid=1021587" இலிருந்து மீள்விக்கப்பட்டது