பக்கம்:நீலா மாலா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 யைத் திறந்தார். பளபளக்கும் கோப்பையை எ டு த் து மீனுட்சி அம்மாளிடம் நீட்டினர். 'அம்மா, உங்கள் கையாலே நீலாவுக்குக் கொடுங்கள்’ என்ருர். “என் கையாலே கொடுப்பதைவிட உங்கள் கையாலே கொடுப்பதுதான் பொருத்தம். அவள் இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் கையாலே கொடுங்கள்’’’ என்ருள் மீனுட்சி அம்மாள். தலைமை ஆசிரியர் நீலாவிடம் வெள்ளிக் கோப் பையைக் கொடுத்து மனமார வாழ்த்தினர். மீனுட்சி அம்மாள் அந்தக் காட்சியைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தாள். தலைமை ஆசிரியர் போன பிறகு, நீலாவின் அம்மாவுக்கு வெள்ளிக் கோப்பை பெரிய பிரச்னை யாகப் போய்விட்டது. அந்த மதிப்பு மிக்க பொரு ளைப் பாதுகாப்பாக வைக்க அந்தக் குடிசையில் வசதி கிடையாதே! நீலா, இந்த வெள்ளிக் கோப் பையை இந்தக் குடிசையிலே வைக்கக் கூடாது. திருட்டுப் போய்விடும். கம் எஜமானர் வீட்டிலே கொடுத்து வைப்போம்” என்ருள் தன் மகளிடம். "ஆமாம்மா, அதுதான் சரி. அவர்கள்தானே என்னை மேலே மேலே படிக்க வைக்கப் போகி ருர்கள். அவர்களிடம் கொடுத்தால், பத்திரமாகப் பாதுகாப்பார்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/37&oldid=1021588" இலிருந்து மீள்விக்கப்பட்டது