பக்கம்:நீலா மாலா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 உடனே மீனட்சி அம்மாள் சிறிதும் தயங்க வில்லை. இதோ, மெழுகுகிறேன் அம்மா’ என்று கூறிவிட்டு வேலையை ஆரம்பித்தாள். நீலாவும் அம்மாவுக்கு உதவியாக இருந்தாள். அரை மணி கேரத்தில் வேலை முடிந்து விட்டது. வேலை முடிந்ததும், கோப்பையைப் பரமசிவம் பிள்ளையிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னுர்கள்.

  • மீனுட்சி, கோப்பை இங்கேயே பத்திரமாக இருக்கட்டும். இன்னும் நீலா எத்தனையோ கோப் பைகள், கேடயங்கள், பதக்கங்களெல்லாம் வாங் கப் போகிருள். எல்லாவற்றையும் என்னிடத்திலே தங்து வையுங்கள். பத்திரமாக வைத்திருப்பேன். நீலா பெரிய படிப்பு படித்து, பெரிய உத்தியோகம் பார்க்கத்தான் போகிருள். அப்போது, நீலாவின் வீட்டு ஹாலில், கண்ணுடி அலமாரியில் எல்லாவற். றையும் வைக்கலாம். என்ன நீலா, நான் சொல்வது சரிதானே?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் பரமசிவம் பிள்ளை.

நீலா ஒன்றும் சொல்லவில்லை. பதிலுக்குச் சிரித்தாள். எவ்வளவு நல்லவர் !’ என்று மன சுக்குள்ளே பாராட்டினுள். மறுநாள் காலை கேரம். பரமசிவம் பிள்ளையின் வீடு ஒரே உற்சாகத்தில் மூழ்கியிருந்தது. சென்னை யிலிருந்து அவரது மகள் நளினியும், பேத்தி மாலா வும், குட்டிப் பையன் ரவியும் வந்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/44&oldid=1021595" இலிருந்து மீள்விக்கப்பட்டது