பக்கம்:நீலா மாலா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 ரவி நீலாவிடம் நன்ருக ஒட்டிக் கொண்டான். அவள் குரல் கேட்டால் போதும்; தாவிக் குதித்துக் கொண்டு அவளிடம் போகத் துடிப்பான். ரவியை உட்கார வைத்துக்கொண்டு நீலா ஆடுவாள் ; பாடுவாள் ; அவனைத் துரக்கிக்கொண்டு தோட் டத்திலுள்ள ம ல ர் க ள், பறவைகளே யெல்லாம் வேடிக்கை காட்டுவாள். மாலா, நீலா, ரவி மூவரும் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்கள். பார்ப் பவர்களுக்கு அந்தக் கா ட் சி இனிமையாக இருக்கும். ஒரு நாள் ரவியின் அம்மா களினி, தன் அம்மா விடம், அம்மா, இதோ. ஜன்னல் பக்கமாகத் தோட் டத்தைப் பாரம்மா. நீலா நம் ரவியிடத்திலே எவ் வளவு பிரியமாக இருக்கிருள்! அவளை விட்டு அவன் பிரியவே மாட்டேன் என்கிருன்!” என்ருள். ஆமாம், குழங்தையை வைத்துக் கொள்வ தற்கு ஒரு பரிசு வைத்தால், அதிலும் நீலாவுக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும்.’’ என்ருள் பார்வதி அம்மாள்.

  • அம்மா ! இன்னும் இருபது காட்களிலே சென்னைக்குத் திரும்ப வேண்டுமே, அப்போது நீலாவை விட்டுப் பிரிய ரவிக்குக் கஷ்டமாக இருக் கும்; இல்லையா அம்மா ?”
  • ரவி எதற்காகக் கஷ்டப்பட வேண்டும் ? கீலாவையும் கூடவே அழைத்துப் போனுல் சரியாகி விடும்.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/47&oldid=1021598" இலிருந்து மீள்விக்கப்பட்டது