பக்கம்:நீலா மாலா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 மரங்களைப் பார்த்தாள். அப்புறம் சிறிது துரத்தில் இருந்த மலைகளைப் பார்த்தாள். வானத்திலே கூட்ட மாகப் பறந்து சென்ற பறவைகளையும் பார்த்தாள். அவள் எங்கு எங்கு பார்த்தாளோ அங்கெல்லாம் அவளுடைய தாத்தாவும் பார்த்தார். மாலா பார்த்த காட்சி, அவள் மனத்திலே கன் ருகப் பதிந்து விட்டது. அந்தக் காட்சியை ஒரு படமாக வரைய வேண்டும் என்பது அவளது ஆசை. அவளுக்குச் சுமாராகப் படம் போட வரும். சென்னையிலே பொழுது போகாதபோது படம் வரைந்து கொண்டிருப்பாள். அன்று காலைப் பலகாரம் சாப்பிட்ட பின், தாமரைக் குளத்தை ஓர் அழகான படமாக வரைவ தற்கு உட்கார்ந்தாள். மத்தியானம் வரை வரைக் தாள். அவளுக்குத் திருப்தியாக அது அமைய வில்லை. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் காலை நேரத்தில் படம் வரைந்தாள். ஆலுைம், நீலாவிடம் அதைப் பற்றி அவள் சொல்லவே இல்லை. ஊரை விட்டுப்போகும்போது அந்தப்படத்தை நீலாவுக்குப் பரிசாகக்கொடுத்து ஆச்சரியப்பட வைக்கவேண்டும் என்று நினைத்தாள். நீலாவுக்குப் பரீட்சை முடிந்த பிறகு, கீலாவுடனே நீண்டநேரம் இருந்து வந்தாள். அ வ ளு ட ன் பேசுவதிலும் விளையாடுவதிலுமே நேரத்தைப் போக்கினுள். மாடி அறையிலிருந்த மேஜைக்குள் அரைகுறையாக அவள் வரைந்து வைத்திருந்த படத்தை அ டி யோடு ம ற ங் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/56&oldid=1021607" இலிருந்து மீள்விக்கப்பட்டது