பக்கம்:நீலா மாலா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63 திருந்தால், உன் கதி என்ன ஆகியிருக்கும் அவர் கூட வந்த போலிஸ்காரர்களிடத்திலே, உன்னை ஒப்படைத்திருப்பார். அவர்கள் உன்னை அமரபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருப்பார் கள். எங்களுக்கெல்லாம் அவமானமாகப் போயிருக் கும். அதனுலேதான் கான் இதைப் பற்றிப் பேசா மலே இருந்து விட்டேன். டேய் முரளி, உன் கெட்ட குணம் வளர்ந்துகொண்டே போகிறது. உன்னைத் திருத்தவே முடியாது. ஆல்ை, ஒரு விஷயத்திலே கான் கண்டிப்பாக இருக்கப் போகி றேன். இன்றையிலிருந்து நீ இந்த வீட்டுப் படி ஏறக்கூடாது...போடா, வெளியே ' என்று கூறி, அவன் பிடரியிலே கையை வைத்து வேகமாகத் தள்ளினர். உடனே மாலா குறுக்கே ஒடி வந்தாள். " தாத்தா ! முரளி தெரியாமல் தப்புப் பண்ணிவிட் டான். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டான். இந்தத் தடவை மன்னித்து விடுங்கள், தாத்தா !” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். “ டேய் முரளி, அன்றைக்கு நீலாவின் அம்மா ஏன் விழாவிற்கு வரவில்லை ? உன் அத்தைக்கு உடம்பு சரியில்லாததால், உன் அத்தையைத் தனி யாக விட்டுவர அவளுக்கு மனசில்லை. கூடவே இருந்திருக்கிருள். விழாவிற்கு வராதது மட்டும் இல்லை. அவள் மகள் பரிசு மேலே பரிசு வாங்கி னுளே, அதை யெல்லாம் அவள் பார்த்தாளா ? அவள் மகளைப் பலரும் பாராட்டிப் பேசினர்களே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/65&oldid=1021616" இலிருந்து மீள்விக்கப்பட்டது