பக்கம்:நீலா மாலா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

7. மாலா வரைந்த படம்! “என்ன நீலா, நீ வர்ணப் பெட்டியைக் கொண்டு வந்தது எனக்காகவா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முரளி. "ஆமாம் முரளி ! உனக்காகவேதான் கொண்டு வந்தேன். நீ உன் மாமாவிடம் வர்ணப் பெட்டி வாங்கித் தரச்சொல்லிப் பல தடவை கேட்டாயாம். என் அம்மா சொன்னர்கள். பாவம், நம் முரளிக்கு இதைக் கொடு. தோன் கிறையப் பரிசு வைத் திருக்கிருயே’ என்று சொல்லி, என் அம்மா இதை எடுத்துக் கொடுத்தார்கள்' என்று கூறி வர்ணப் பெட்டியை முரளியிடம் நீட்டினுள் நீலா. முரளி அதை வாங்குவதற்குத் தயங்கினன். 'முரளி வாங்கிக்கொள். அன்போடு கொடுப் பதை வேண்டாமென்று சொல்லக் கூடாதாம். என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் ' என்ருள் மாலாமுரளி, வர்ணப் பெட்டியைத் தயக்கத்தோடு கையில் வாங்கின்ை. அப்போது அவன் கைகள் கூசின. கண்களிலிருந்து நீர் வழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/69&oldid=1021620" இலிருந்து மீள்விக்கப்பட்டது