பக்கம்:நீலா மாலா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 'ஏன் முரளி, அழுகிருய்?’ என்று ஒரே சமயத் தில் மாலாவும் நீலாவும் கேட்டார்கள். 'லோ! உன் அம்மா எவ்வளவு நல்லவர்கள் : அவர்களைக் கருந்தேள் கொட்டியதாக ...” அதற்கு மேல் அவனுல் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. 'முரளி, இது வரையில் கடந்த கெட்டதை யெல்லாம் மறந்து விடுவோம் ; கல்லதை மட்டும் கினேவு வைத்துக் கொள்வோம்...வாருங்கள், மாடிக் குப் போவோம்’ என்று நீலாவையும் முரளியையும் மாலா மாடிக்கு அழைத்துச் சென்ருள். மேஜை அறையைத் திறந்தாள். உள்ளேயிருந்த படத்தை எடுத்துக் காட்டினுள். 'அடடே படம் எவ்வளவு அழகாக இருக் கிறது! மிகமிக கன்ருக வரைந்திருக்கிருயே!” என்று வியப்போடு கூறினுள் நீலா. 'ஏதோ எனக்குத் தெரிந்தபடி வரைந்திருக் கிறேன். நீலா, நீ என்னுடைய நல்ல சிநேகிதி. கல்ல சிநேகிதி என்ன செய்யவேனும்? தப்பு ஏதா வது இருந்தால் அதை எடுத்துச் சொல்லித் திருத்த வேணும்' 'ஒஹோ! அப்படியா? மாலா, தாமரைக் குளம், அதைச் சுற்றியிருக்கிற மரங்கள், கொஞ்ச துரத் தில் தெரிகிற மலை, மேலே பறக்கிற பறவைகள்எல்லாவற்றையும் கன்ருகத்தான் வரைந்திருக் கிருய். ஆனல்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/70&oldid=1021621" இலிருந்து மீள்விக்கப்பட்டது