பக்கம்:நீலா மாலா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 "என்ன ஆல்ை...? சொல்லு, நீலா. சும்மா சொல்லு.” "ஒரே ஒரு சின்னத் திருத்தம் செய்தால், இயற் கையாக இருக்கும் ” "இதோ, உடனே திருத்தி விடுகிறேன்... சொல்லு நீலா !” "எங்களுர்த் தாமரைக் குளத்திலே வாத்துக் களைத்தானே நீ பார்த்திருப்பாய்? ஆனால், படத் திலே வாத்துக்களைக் காணுேம் ! அன்னங்களைப் போ ட் டி ரு க் கி ரு யே! இரண்டு வெள்ளே அன்னங்கள். ஒரு கறுப்பு அன்னம். பொருத்தமாக இல்லையே!” 'கீலா 1 குளத்திலே அன்னங்கள் இருந்தால் அழகாயிருக்குமே என்றுதான் அப்படி போட்டேன்” "அழகாகத்தான் இரு க் கி ற து. ஆ ைல் பொருத்தமாக இல்லையே!” "ஆமாம் நீலா, தப்புத்தான். நான் கண்ணுலே கண்டதைத்தானே படமாக எழுதுகிறேன்? எதற் காக இந்த அன்னங்களெல்லாம்? இதோ பார். வாத்துக்களாக மாற்றி விடுகிறேன்' என்று கூறி அன்னங்களிலே மாலா சில திருத்தங்களைச் செய் தாள். சில கோடுகளை ரப்பரால் அழித்தாள்: உடனே, அன்னங்கள் இருந்த இடத்தில் வாத் துக்கள் தெரிந்தன ! 'அபாரம் ! அபாரம் 1’ என்று துள்ளிக் குதித் தான் முரளி. எது அபாரம்? நீலாவின் யோசனை தானே ?” என்று கேடடாள் மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/72&oldid=1021624" இலிருந்து மீள்விக்கப்பட்டது